Monday, October 28, 2013

பிரதான கணக்கீட்டுப் பேரேடுகள்( Main Accounting Records)

01. காசுப்புத்தகம்
02. வாக்குப் பேரேடு
03. வகையீட்டுப் பதிவுப் பேரேடு
04. பொறுப்பேற்றல் கட்டளைப் புத்தகப் படிவம் பொது 172
05. கடன்கள் அறவீட்டுப் பதிவேடு சிசி 10 உம் ஏனைய பதிவேடுகளும்
06. சில்லறைக் காசேட்டுப் பதிவேடு
07. கட்டுநிதி முற்பணப் பதிவேடு
08. வைப்புக்கள் பதிவேடுகள் படிவம் பொது 69
09. கட்டுநிதி கணக்குப் பேரேடு, முற்பணங்களும் வைப்புக் கணக்குகளும்
10. காசோலைகளும் காசுக் கட்டளைகளுக்குமான பதிவேடுகள் படிவம்
11. காசோலைகளின் அடியிதழ் சேர் பதிவேடுகள்
12. அடியிதழ் சேர் புத்தகங்களின் பதிவேடு
13. கணக்காய்வு ஐயவினாக்கள் பதிவேடு
14. பொருட்கள் இருப்புப் பதிவேடுகள் படிவம் பொது 144
15. ஆளுக்குரிய வேதனாதிகளும், கூலிகளும் பதிவேடு
16. விதவைகள், அனாதைகள் ஓய்வூதியப் பதிவேடு
17. ஊழியர் சேமலாப நிதிப் பதிவேடுகள்
18. நிலையான சொத்துக்கள் பதிவேடு
19. கனரக இயந்திரங்கள் பதிவேடு

Thursday, October 24, 2013

காசோலையின் பாதுகாப்பும் காசோலை வங்கியில் இருந்து பெறுதலும்

ஏதாவது வங்கியில் நடைமுறைக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்ட பின் அவ்வங்கி மூலம் அக்கணக்கின் நிமித்தம் காசோலைப் புத்தகங்கள் வழங்கப்படும்.

வங்கியில் இருந்து கிடைக்கும் காசோலைப் புத்தகங்கள் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தில் பதிந்து பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவரால் சரிபார்க்கப்பட்டு முதலொப்பம் இடப்படுவதோடு பொறுப்பான நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைப்பதற்காக வழங்கப்படுதல் வேண்டும். இதற்காக இரும்புப் பெட்டி(Iron Safe) இருப்பின் விரும்பத்தக்கது. காசோலைப் புத்தகங்கள் கிடைத்தவுடன் பற்றுச்சீட்டு அனுப்பமுன் காசோலைப் புத்தகங்களின் இலக்கங்கள் சரியானவையாகவும், காசோலைகள் யாவும் இலக்க ஒழுங்கின்படி உள்ளனவா என்பதையும் தாமே பரீட்சித்துப் பாத்தல் வேண்டும்.

எல்லா காசோலையும்” மாற்ற முடியாது” என குறிக்கப்பட்ட காசோலைப் புத்தகம் வழங்கும்படி வங்கியிடம் கேட்டல் வேண்டும். எல்லாக் காசோலைகளும் குறுக்குக் கோடிட்டு “பெறுபவரின் கணக்குக்கு மட்டும்” என எழுதி பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
வங்கியில் இருந்து பெறப்படும் காசோலைகள் யாவும் உரிய ஏட்டில் பதிந்து காசோலைகளின் தொகைகள் காசோலைப் புத்தகம் பெற்ற திகதி ஆகியன பதிந்து பின் காசோலை எழுதும் இலிகிதருக்கு வழங்கும் போது உரிய காசோலைப் புத்தக இலக்கத்திற்கு எதிரே கையொப்பம் இடுவதோடு பெறும் திகதியும் குறித்தல் வேண்டும்.

ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்தில் உள்ள உத்தியோகத்தர் ஒருவரின் கையொப்பம் பெறுவதற்காக அனுப்பப்படும் சந்தர்ப்பத்தில் காசோலைப் புத்தகத்தைப் பிரத்தியோகப் பெட்டியொன்றில் இட்டு பூட்டி அனுப்புதல் வேண்டும். பெட்டியின் திறப்பு கையொப்பம் இடுபவர்களிடம் மட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.